வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் திருமணம் செய்த புதுப்பெண் உறவினர்களுடன் உண்ணாவிரதம்


வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் திருமணம் செய்த புதுப்பெண் உறவினர்களுடன் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Sep 2020 3:18 AM GMT (Updated: 24 Sep 2020 3:18 AM GMT)

கடத்தி செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் திருமணம் செய்த புதுப்பெண் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரி சாமி. இவருடைய மகள் சுமதி (வயது 26). இவரும், பஞ்சநதிக்குளம் மேல சேத்தியை சேர்ந்த ஜெகநாதன் மகன் செல்வ குமார்(28) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் செல்வக்குமார் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்.

கடந்த 15-ந் தேதி செல்வ குமார் வெளிநாட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். மறுநாள்(16-ந் தேதி) காலை சுமதியின் பெற்றோர் முன்னி லையில் செல்வகுமார், சுமதிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் அவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

கடத்தல்

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மதியம் 1 மணி அளவில் வேதாரண்யம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய ஒரு காரில் சுமதி, செல்வகுமார் மற்றும் சுமதியின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அங்கு காரை விட்டு சுமதி இறங்கியபோது அவரை கீழே தள்ளிவிட்டு, செல்வகுமாரை பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பஞ்சநதிக் குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த குமார், மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரத போராட்டம்

இதுகுறித்து சுமதி, வேதாரண்யம் போலீசில் தனது கணவரை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், தனது கணவரை உடனடியாக மீட்டுத்தரக்கோரியும் சுமதி தனது உறவினர்களுடன் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட் டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வி வர்ஜீனியா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story