ஜோலார்பேட்டையில், ரெயில்பெட்டிகளில் மின்வயர் திருடிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
ஜோலார்பேட்டையில் ரெயில்பெட்டிகளில் மின்வயர் திருடிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையில் பராமரிப்புப் பணிக்காக ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன. பராமரிப்புப் பணி முடிந்ததும் மீண்டும் ரெயிலை இயக்கி செல்லும்போது, பயணிகள் ரெயிலில் ஒருசில பெட்டிகளில் மின்விளக்குகள் எரியாமலும், பயணிகள் செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக உள்ள மின்பாக்ஸ், கழிவறையில் மின்சார வசதி இல்லாமலும் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பராமரிப்புப் பணிக்காக பயணிகள் ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் அருகில் மறைவான ஓரிடத்தில் ரெயில் பெட்டியின் உள்ளே நுழைவதற்கு நோட்டமிட்டு இருந்த 2 பேரை ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இருவரும் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான மெக்கானிக் வேலை செய்து வரும் தூயவன் (வயது 19), விஜயனின் மகன் கட்டிட தொழிலாளியான கார்த்திக் (29) எனத் தெரிய வந்தது. இருவரும் தொடர்ந்து இரவில் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும் பயணிகள் ரெயிலில் மின் வயர்களை திருடிச் சென்று ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்புக்கடை வியாபாரி அச்சுதன் (62) என்பவரிடம் விற்று வந்ததாகக் கூறினர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மின் வயர்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story