நீரிழிவு நோயாளிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்


நீரிழிவு நோயாளிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Sep 2020 11:00 PM GMT (Updated: 2020-09-25T02:09:03+05:30)

நீரிழிவு நோயாளிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் எளிதில் நோயினால் பாதிப்பு அடைகின்றனர்.

ஆகவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story