கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 25 Sep 2020 1:48 AM GMT (Updated: 25 Sep 2020 1:48 AM GMT)

கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், வங்க கடலில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 23-ந் தேதி மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல, மணமேல்குடி பகுதியில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story