நாகையில் போலீசாரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் போலீசாரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2020 2:34 AM GMT (Updated: 25 Sep 2020 2:34 AM GMT)

நாகையில் போலீசாரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

கீழையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்து ஒருதலைபட்சமாக செயல்படும் போலீசாரை கண்டித்து நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அவுரி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டிப்பது.

போலீசாரை கண்டிப்பது

தாமஸ் ஆல்வா எடிசன் தரப்பில் கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்படும் போலீசாரை கண்டிப்பது. எனவே தி.மு.க. ஒன்றிய செயலாளர் கொடுத்த மனு மீது வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் போலீஸ் பன்னீர், செந்தில்குமார், ஒன்றியச்செயலாளர்கள் கோவிந்தராஜ், ஆனந்த், மகாகுமார், குமரேசன் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story