குமாரபாளையம், திருச்செங்கோட்டில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


குமாரபாளையம், திருச்செங்கோட்டில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2020 3:46 AM GMT (Updated: 25 Sep 2020 3:46 AM GMT)

குமாரபாளையம், திருச்செங்கோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்ட மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா காலத்து சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார்.

தொழிற்சங்க நிர்வாகிகள் ஜானகிராமன், ராஜ பொம்மண்ணன், சரவணன், நஞ்சப்பன், ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி தலைமை தாங்கினார். அரசு பஸ்களை தனியார் முதலாளிகள் தங்களது டிரைவர், கண்டக்டர்களை கொண்டு இயக்கும் வகையில் சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளதை கண்டித்தும், கொரோனா காலத்தில் பயணிகள் இல்லாத நிலையில் அதிக வசூலை காட்டாத கண்டக்டர்கள் மற்றும் டீசலை மிச்சம் பிடிக்காத டிரைவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. சங்க கிளை செயலாளர் பெரியசாமி, ஏ.ஐ.டி.யு.சி. கிளை தலைவர் குணசேகரன், செயலாளர் செல்வேந்திரன், சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணைத்தலைவர் தீனதயாளன், கிளைத்தலைவர் முருகேசன், போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன பொருளாளர் செங்கதிர் செல்வன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Next Story