தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு
திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பழனி தபால் அலுவலகம் முன்பு வேளாண் சட்ட மசோதா நகல்கள் கிழிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
பழனி,
திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பழனி தபால் அலுவலகம் முன்பு வேளாண் சட்ட மசோதா நகல்கள் கிழிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சதாம் உசேன், மாவட்ட துணைத்தலைவர் தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளை பாதிப்படைய செய்யும் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திடீரென மத்திய அரசு வேளாண் சட்ட மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். பின்னர் அவர்கள், பழனி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் லத்தீப் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல்லா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட மசோதாவை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேளாண் சட்ட மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story