மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2020 6:10 AM GMT (Updated: 25 Sep 2020 6:10 AM GMT)

மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரியும், இதற்கு பதிலாக மாற்று திட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று மாலை 6 மணியளவில் கூடலூர் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூர்,

முல்லைப்பெரியாற்றின் தலைமதகு பகுதியான லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரியும், இதற்கு பதிலாக மாற்று திட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று மாலை 6 மணியளவில் கூடலூர் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு 5 மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், முல்லைப்பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார், இயற்கை வேளாண் உற்பத்தி விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகில் உள்ள கல்லார் அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக அரசு கேரள அரசுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Next Story