தனது தம்பி சோவிக் மூலம் நடிகை ரியா, காதலன் சுஷாந்திற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தார் அதிகாரி தகவல்
தனது தம்பி சோவிக் மூலம் நடிகை ரியா காதலன் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தார் என்று விசாரணை அதிகாரி கூறினார்.
மும்பை,
மும்பையில் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது மரணத்திற்கும், போதைப்பொருளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், இந்தி திரையுலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்.சி.பி.) விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி, இவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டுமேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நடிகை ரியா தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.
இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில், “விசாரணையின் போது போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பாரிகர், கைசான் இப்ராகிம் ஆகியோரிடம் இருந்து சோவிக் போதைப்பொருளை வாங்கியது தெரியவந்தது. அதை அவர் தனது அக்காள் ரியாவிடம் கொடுத்து உள்ளார். ரியா அதை மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.
இதேபோல சாமுவேல் மிரண்டா மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோர் கஞ்சாவை சிகரெட்டில் நிரப்பி சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்து உள்ளனர்” என்றார்.

Related Tags :
Next Story