மனைவி-மாமியாரை கொலை செய்த வாலிபர், கும்பகோணம் கோர்ட்டில் சரண்


மனைவி-மாமியாரை கொலை செய்த வாலிபர், கும்பகோணம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 26 Sept 2020 4:00 AM IST (Updated: 26 Sept 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

மனைவி-மாமியாரை கொலை செய்த திருச்சி வாலிபர் கும்பகோணம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

கும்பகோணம், 

திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 25). இவரது மனைவி பவித்ரா. சம்பவத்தன்று குடும்பத்தகராறு காரணமாக உலகநாதன் தனது மனைவி பவித்ரா மற்றும் பவித்ராவின் தாயார் கலைச்செல்வியை கொலை செய்து விட்டு தனது 6 வயது மகள் கனிஷ்காவுடன் தலைமறைவானார். இது தொடர்பாக திருச்சி கோர்ட்டு போலீஸ் நிலைய போலீசார், தலைமறைவான உலகநாதனை தேடி வந்தனர். இந்த நிலையில் உலகநாதன், கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை முதலாம் எண் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடுவர் தரணிதர் முன்பாக நேற்று சரண் அடைந்தார்.

அவரை நீதிபதி தரணிதர் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சாவூர் கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உலகநாதன் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாக உலகநாதன், தனது குழந்தையை தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

Next Story