கோவையில் பரபரப்பு: விமான நிலைய கழிவறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு
கோவை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் 6 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
கோவை,
கோவையில் இருந்து விமானத்தில் பயணம் செய்பவர்களின் டிக்கெட்டுகளை நுழைவு வாயிலில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) சோதனையிடுவார்கள். அதை தாண்டி செல்லும் பயணிகளின் உடைமைகள் விமான நிறுவனங்களின் ஸ்கேனர்களில் ஸ்கேன் செய்யப்படும். இதையடுத்து அந்த லக்கேஜ்களுடன் செல்லும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களின் கவுண்ட்டர்களில் இருக்கை எண்ணுடன் கூடிய டிக்கெட்டை பெற்றுக் கொண்டு தாங்கள் கொண்டு வரும் லக்கேஜ்களை அந்த கவுண்ட்டர்களில் ஒப்படைத்து விடுவார்கள். அந்த லக்கேஜ்கள் கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டு விமானங்களில் ஏற்றப்படும். டிக்கெட் பெற்றுக் கொள்ளும் பயணிகள், அவர் கள் கொண்டு செல்லும் கைப்பைகளை செக் இன் என்ற பிரிவில் மெட்டல் டிடெக்டர் மூலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள், ஆண் மற்றும் பெண் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். செக் இன் பிரிவுக்கு முன்னதாக ஆண் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை செக் இன் பிரிவுக்கு அருகில் உள்ள ஆண் கழிவறையில் பழுது நீக்குவதற்காக நேற்றுக்காலை 10.30 மணிக்கு ஒரு பிளம்பர் சென்றார். அப்போது அங்குள்ள கழிவறையில் சில இரும்பு துண்டுகள் இருப்பதை பார்த்து, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார்.
அவர்கள் உடனடியாக அங்கு வந்து கழிவறையில் கிடந்த 6 இரும்பு துண்டுகளை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், அவை துப்பாக்கிக ளில் பயன்படுத்தும் தோட்டாக்கள் என்பது தெரிய வந்தது. அதில் 4 தோட்டாக்களில் வெடிமருந்துகள் இருந்தன. 2 தோட்டாக்களில் வெடிமருந்துகள் இல்லை. வெடிமருந்து உள்ள 3 தோட்டாக்கள் 9 எம்.எம். கைத்துப்பாக்கியில் (பிஸ்டல்) பயன்படுத்தக்கூடியவை. மற்றொரு தோட்டா எஸ்.எல்.ஆர். என்ற எந்திர துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடியவை ஆகும்.பாதுகாப்பு நிறைந்த கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அந்த தோட்டாக்களை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கைப்பற்றி பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story