ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 20 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் - ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 20 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாரதீய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் தொடர்பான சட்டங்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் ராணிப்பேட்டை நகராட்சியில் நாளை (திங்கட்கிழமை) எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து நகரம், ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். எனவே அந்தந்த பகுதி நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரவர் பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்று விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலன் காக்க இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story