செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 259 பேர் பாதிப்பு கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 259 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 259 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 276 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 353 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 235 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 31 ஆயிரத்து 449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29 ஆயிரத்து 292 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 618 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 539 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்து உள்ளார்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 30, 24, 36 வயது வாலிபர் மற்றும் 55 வயது பெண், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 41 வயது ஆண், கரசங்கால் பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 178 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story