தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2020 4:55 AM IST (Updated: 27 Sept 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் இ.சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான புளூ பிரிண்ட் வரைபடம் (6 நகல்), கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தை காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசுகணக்கில் செலுத்தியதற்கான ரசீது, இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு), வரி ரசீது, 2 பாஸ்போர்ட் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இ.சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.

நிரந்தர பட்டாசு விற்பனை உரிமத்திற்கோ, வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழி முறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story