சிவகங்கை அருகே, 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஊருணி - கலெக்டர் நடவடிக்கையால் மீட்பு


சிவகங்கை அருகே, 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஊருணி -  கலெக்டர் நடவடிக்கையால் மீட்பு
x
தினத்தந்தி 27 Sept 2020 3:45 AM IST (Updated: 27 Sept 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பால் மாயமான ஊருணி கலெக்டர் நடவடிக்கையால் மீட்கப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த ஒக்குப்பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பில்லூரணி என்ற ஊருணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த ஊருணி முறையாக பராமரிக்கப்படாததால் மேடாகி பயன்பாடு இல்லாமல் போனது.

இந்தநிலையில் இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தம்மாள், முன்னாள் தலைவர் பழனி மற்றும் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து காணாமல்போன ஊருணியை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி சிவகங்கை தாசில்தார் மைலாவதிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள், அங்கு சென்று ஆக்கிரமிப்பால் 60 ஆண்டுகளாக மாயமான பில்லூரணியை மீட்டு ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு சீரமைத்தனர். அத்துடன் ஊருணிக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். இதைத்தொடர்ந்து கலெக்டருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story