மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2020 7:17 AM IST (Updated: 27 Sept 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை, 

வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய கோரியும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ஆரப்பாளையம் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகி பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆனந்தகுமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் குமரவேல், பழனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story