ஆண்டிப்பட்டி அருகே, நிலக்கரி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு


ஆண்டிப்பட்டி அருகே, நிலக்கரி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Sept 2020 11:30 AM IST (Updated: 27 Sept 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே நிலக்கரி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.இதனால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி, 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 24). லாரி டிரைவர். இவரும் விளாத்திக்குளத்தை சேர்ந்த கிளீனரான முனியசாமியும் (27) கன்டெய்னர் லாரியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி வந்தனர். வழியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த மாலைப்பட்டி விலக்கு பகுதியில் வந்த போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் கன்டெய்னரில் இருந்த நிலக்கரி அனைத்தும் கீழே கொட்டி சாலையை அடைத்துக்கொண்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இது குறித்து தகவலறிந்ததும் க.விலக்கு போலீசார் விரைந்து வந்து லாரியை மீட்டு சாலையில் கொட்டிக்கிடந்த நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின்போது யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story