தஞ்சை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நடவு முடிந்தது குறுவை அறுவடையும் இறுதிக்கட்டத்தை எட்டியது
தஞ்சை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நடவு முடிந்துள்ளது. குறுவை அறுவடையும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தமிழகத்தின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பதும் தஞ்சை மாவட்டம் தான். இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 12½ லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூன் 16-ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரும் பயன்பெறும்.
சம்பா நடவுப்பணிகள்
இந்த நிலையில் குறுவை சாகுபடி பணிகள் நிறைவடைந்ததையடுத்து சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேரடி நெல் விதைப்பும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 3 லட்சத்து 16 ஆயிரத்து 64 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 50 ஆயிரம் ஏக்கர் நடவுப்பணிகளும், 17 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணிகளும் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேரடி நெல் விதைப்பு
இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி நடவுப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் தொடக்கத்தில் நடவுப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விடும். நேரடி நெல் விதைப்பு பணிகளும் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடந்ததைப்போல சம்பா, தாளடி சாகுபடி பணிகளும் இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

Related Tags :
Next Story