மணவாளக்குறிச்சி அருகே கோழி ஏற்றி வந்த டெம்போ, டிரான்ஸ்பார்மர் மீது மோதியது


மணவாளக்குறிச்சி அருகே கோழி ஏற்றி வந்த டெம்போ, டிரான்ஸ்பார்மர் மீது மோதியது
x
தினத்தந்தி 27 Sep 2020 2:16 PM GMT (Updated: 27 Sep 2020 2:16 PM GMT)

மணவாளக்குறிச்சி அருகே கோழி ஏற்றி வந்த டெம்போ டிரான்ஸ்பார்மர் மீது மோதி, கவிழ்ந்தது. டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினர்.

மணவாளக்குறிச்சி,

நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் நகரை சேர்ந்தவர் சுயம்பு பாண்டி (வயது 37) இவர் திசையன்விளையில் இருந்து களியக்காவிளைக்கு டெம்போவில் கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்தார். அவருடன் கீதன் (24) என்ற கிளீனர் இருந்தார்

அந்த டெம்போ மணவாளக்குறிச்சி அருகே கூட்டு மங்கலம் பகுதியில் வரும் போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி, கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டது.

10 கோழிகள் செத்தன

இந்த விபத்தில் டெம்போவில் இருந்த 10 கோழிகள் செத்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர் சுயம்பு பாண்டி, கிளீனர் கீதன் ஆகியோர் காயமின்றி தப்பினார்கள்

இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதே சமயம் கோழிகள் வேறு டெம்போவில் ஏற்றி, களியக்காவிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story