மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன்கடைகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் + "||" + Udumalai K. Radhakrishnan, Minister of 77 Amma Moving Ration Shops in Tirupur District has started

திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன்கடைகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன்கடைகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
உடுமலையில் நடந்த விழாவில், 77 அம்மா நகரும் ரேஷன் கடைகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
உடுமலை,

திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன் மூலமாக 8,236 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இதில் உடுமலை தாலுகாவில் 15 அம்மா நகரும் ரேஷன் கடைகள் மூலம் 1,445 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். அம்மா நகரும் ரேஷன் கடை தொடக்க விழா உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் உடுமலையில் நடந்தது. விழாவிற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, அம்மா நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசியதாவது:-


கால்நடை பூங்கா

நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தாய் கடையின் விற்பனையாளர் சென்று பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வார். பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் நடப்பாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள், மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கப்பட உள்ளது.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். நடப்பு ஆண்டில் கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.பிரபு வரவேற்று பேசினார். பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் நர்மதா நன்றி கூறினார். விழாவில் துணைப்பதிவாளர் சேகர், உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்க மேலாண்மை இயக்குனர் ப.தமிழரசு, தலைவர் ஆர்.முருகேசன், துணைத்தலைவர் அ.தங்கவேல், கண்காணிப்பாளர் வி.சிவகுமார், பொதுமேலாளர் பி.ரவி மற்றும் அரசு துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு: மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுபானை, மண் அடுப்பு வழங்கவேண்டும்
பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுபானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும் என்று குலாலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
3. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தங்களது ரேஷன், ஆதார் கார்டுகளை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தகவல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆஸ்டின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
5. நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி: 10 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை