கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி


கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி
x

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசு திட்டங்கள், நல உதவிகள் வழங்குதல், தமிழக அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள், தமிழக அரசின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், மடிக்கணினி, விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் திருமண நிதியுதவி திட்டங்கள், மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் திட்டங்கள், ஏரிகள் குடிமராமத்து மேற்கொண்ட புகைப்படங்கள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதை ஏராளமான பயணிகள் பார்வையிட்டனர்.

Next Story