சேலத்தில் நிதி நிறுவனம் மூலம் வாங்கிய காரை விற்பனை செய்து ரூ.2¼ லட்சம் மோசடி
சேலத்தில் நிதி நிறுவனம் மூலம் வாங்கிய காரை விற்பனை செய்து ரூ.2¼ லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு.
சேலம்,
சேலம் அழகாபுரம் பெரியான்வட்டம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குப்தா. இவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் சொகுசு கார் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் அந்த காரை பவானியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். ஆனால் கடன் தொகையை முழுமையாக செலுத்துவதற்கு முன் மோசடியாக காரை விற்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் கணேஷ்குமார் என்பவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தங்களது நிறுவனத்தில் கடன் பெற்று வாங்கிய சொகுசு காருக்கு இன்னும் ரூ.2.40 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் போலி ஆவணங்கள் மூலம் அந்த காரை வேறு நபருக்கு அரவிந்த் குப்தா விற்பனை செய்துவிட்டார். அதற்கு உடந்தையாக ராஜா, ஆனந்தன் ஆகியோர் இருந்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், விசாரணை நடத்தி நிதி நிறுவனத்திற்கு ரூ. 2.40 லட்சத்தை செலுத்தாமல் மோசடியாக காரை விற்பனை செய்ததாக அரவிந்த் குப்தா மற்றும் ராஜா, ஆனந்தன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story