தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி
x
தினத்தந்தி 27 Sep 2020 10:15 PM GMT (Updated: 27 Sep 2020 5:49 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு தனியாக எரிபொருள் நிரப்பும் நிலையம் இல்லை.

இதனால் டேங்கர் லாரிகள் மூலம் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டு கப்பல்களில் நிரப்பப்பட்டு வந்தது.

இந்த வசதி கப்பல் துறைமுக கப்பல் தளத்தில் நிற்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திலும் எரிபொருளை நிரப்புவதற்கு வசதியாக எரிபொருள் டேங்கர் பொருத்திய மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 4-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த எம்.வி.ஆஸ்சேலஸ் கிரேசியா என்ற கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எம்.வி.ஸ்ரீபிரகாஷ் என்ற எரிபொருள் நிரப்பு மிதவை கப்பல் மூலம் இந்த பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதல் முறையாக மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது. இதனை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

Next Story