சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம் பகுதிக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் அமைச்சர் ராஜலட்சுமி தகவல்
சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம் பகுதிக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
நெல்லை,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.543 கோடியே 20 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த கட்டுமான பணிகளை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.543 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள் மற்றும் திருவேங்கடம் பேரூராட்சி பகுதிகளுக்கான செலவு மட்டும் ரூ.307 கோடி ஆகும். இந்த திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வருகிற 2036-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை மற்றும் 2047-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக கொண்டாநகரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள தடுப்பு அணைக்கு முன்பாக தண்ணீர் எடுக்கும் உறைகிணறு அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து தண்ணீரை எடுத்து கொண்டாநகரம் பரும்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரித்து மானூர், பனவடலிசத்திரம் ஆகிய நீருந்து நிலையங்கள் வழியாக சங்கரன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து புளியங்குடி, திருவேங்கடம் மற்றும் விருதுநகர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த பணிகள் தற்போது 78 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம், சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் கண்ணன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிகோட்டை செல்லத்துரை, குடிநீர் வடிகால் வாரிய தென்காசி கோட்ட நிர்வாக பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர் ராமலட்சுமி, உதவி பொறியாளர்கள் ராஜூ, ஜெயச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story