ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை


ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 Sept 2020 5:37 AM IST (Updated: 28 Sept 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத்தில் ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

அவுரங்காபாத்தில் உள்ள பைதான் நகரை சேர்ந்த 42 வயது நபருக்கு கடந்த சில நாட்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அவுரங்காபத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 25-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் உடல்நிலை மோசமானதால் அவர் நேற்று ஆஸ்பத்திரி 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

நேற்று காலை 7 மணியள வில் அவர் ஆஸ்பத்திரி ஊழியரிடம் தண்ணீர் கேட்டார். அவர்கள் எடுக்க சென்ற நேரம் பார்த்து அவர் அங்கு இருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்துவிட்டார். இதில் தரையில் மோதி படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலை ஆஸ்பத்திரி டீன் கனன் எலேகர் உறுதிபடுத்தினார். கொரோனா நோயாளி ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து பெகும்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story