பால்கரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.8 கோடி பொருட்கள் பறிமுதல்


பால்கரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.8 கோடி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Sept 2020 5:41 AM IST (Updated: 28 Sept 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.8 கோடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

மும்பை,

பால்கர் மாவட்டத்தில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் காரடி மற்றும் கானிவாடி கிராமங்களையொட்டி தான்சா, வைத்தர்னா நதிப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதிகளில் அதிகளவில் மணல் கடத்தல் நடப்பது தெரியவந்தது.

போலீசார் அந்த பகுதிகளில் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 230 சிறியரக படகுகள், 152 மோட்டார் பம்புகள், எர்த் முவர் மற்றும் மணலை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.7 கோடியே 90 லட்சம் என போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சச்சின் நவத்கர் கூறியுள்ளார்.

மேலும் மணல் திருட்டு சம்பவம் தொடர்பாக விரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story