கன்னியாகுமரிக்கு வந்த சொகுசு படகு சோதனை ஓட்டம்
கன்னியாகுமரிக்கு புதிதாக வந்த அதிநவீன சொகுசு படகு சோதனை ஓட்டம் நடந்தது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோவாவில் ரூ.4 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்டு “தாமிரபரணி“ என்ற அதிநவீன சொகுசு படகு கடந்த பிப்ரவரி மாதம் கன்னியாகுமரி வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி சுற்றுலா தளம் செயல்படாமல் இருப்பதால் புதிய படகானது படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில் கோவாவில் ரூ.4 கோடியே 35 லட்சம் செலவில் தயாரான மற்றொரு அதிநவீன சொகுசு படகு நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்தது. அந்த படகுக்கு ‘திருவள்ளுவர்‘ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. புதிதாக வந்த அதிநவீன சொகுசு படகு சோதனை ஓட்டம் நேற்று காலை நடந்தது.
ஆனால் படகு துறையில் பொதிகை, குகன், விவேகானந்தா, தாமிரபரணி மற்றும் விவேகானந்தா கேந்திராவுக்கு சொந்தமான ஏக்நாத் ஆகிய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த படகுகளுக்கு இடையே புதிய படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் சோதனை ஓட்டம் நடத்த வந்த என்ஜினீயர்களும், அதிகாரிகளும் புதிய படகில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஒரு படகில் இருந்து மற்றொரு படகுக்கு தாவி தாவி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆய்வு
அதோடு புதிய படகை சோதனை ஓட்டத்துக்காக வெளியே எடுப்பதற்கும் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகே படகை சோதனை ஓட்டத்துக்காக வெளியே எடுக்க முடிந்தது. பின்னர் புதிய படகு கன்னியாகுமரி கடலில் முதல் முறையாக இயக்கப்பட்டது. சுமார் 4 கடல் நாட்டிக்கல் மைல் தூரம் வரை இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதி வரை சென்றது. அப்போது படகின் அடிப்பகுதி கடலுக்கு அடியில் மறைந்துள்ள பாறைகள் மீது உரசுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு விவேகானந்தர் பாறையில் உள்ள படகு தளத்திலும் நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டமானது சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இதற்காக கோவாவில் இருந்து 9 என்ஜினீயர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story