இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சமுதாயக்கூடம், ரேஷன் கடை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்


இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சமுதாயக்கூடம், ரேஷன் கடை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 Sep 2020 4:40 AM GMT (Updated: 28 Sep 2020 4:40 AM GMT)

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சமுதாயக்கூடம், ரேஷன் கடையை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

இளையான்குடி,

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தெற்கு விசவனூர் ஊராட்சியில் ரூ.27 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம், கல்லடி திடல் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோபி வரவேற்றார்.

அப்போது அவர், சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் முதியோர் பென்சன், குடிநீர் வசதி, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, விசவனூர் பகுதிகளில் ரேஷன் கடை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் படியும் அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.

குடிநீர் தட்டுப்பாடு

அமைச்சர் பாஸ்கரன் பேசும்போது, அரசின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைய வேண்டும். நதிகள் இணைப்பு மூலம் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். விவசாயம் செழிக்க அரசு உறுதுணையாகவும் அதற்கு பக்கபலமாக மாவட்ட கலெக்டரும் செயல்படுவதால் அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் காலதாமதமின்றி மக்களிடம் வந்து சேரும் என்று கூறினார்.

விழாவில் ஆர்.டி.ஓ. முத்துக்கழுவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பர்னபாஸ் அந்தோணி, ராஜேஸ்வரி, தாசில்தார்கள் ரமேஷ், செந்தில்வேலன் மற்றும் ஒன்றிய சேர்மன் முனியாண்டி, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீஸ்வரன் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஊராட்சி கிளைச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story