வேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் கடலூரில் திருமாவளவன் பங்கேற்கிறார்
வேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் கடலூரில் திருமாவளவன் பங்கேற்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தகவல்.
கடலூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்ட தலைநகரான கடலூரில் இன்று (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றுகிறார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உரிய பாதுகாப்போடு கலந்துகொள்ள வேண்டும். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story