திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Sept 2020 11:57 AM IST (Updated: 28 Sept 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்றவை மூலம் திருவண்ணாமலைக்கு வந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டர்.

பந்தக்கால் நடும் முகூர்த்த விழா

இன்று (திங்கட்கிழமை) கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் முகூர்த்த விழா காலை சுமார் 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள வருபவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க கோவில் நிர்வாகம் பந்தக்கால் நடும் பகுதியில் வட்டம் வரைந்து இருந்தனர்.

Next Story