தூத்துக்குடியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2020 4:30 AM IST (Updated: 28 Sept 2020 11:01 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அசன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், அவைத்தலைவர் கண்டிவேல், ம.தி.மு.க. நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி, தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, துணை அமைப்பாளர் பொன் முருகேசன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட விவசாய அணி தலைவர் வேல் ராமகிருஷ்ணன், வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, மாவட்ட செயலாளர் ஜெயந்திநாதன், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. செயலாளர் லோகநாதன், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி நடேச ஆதித்தன், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை அமைப்பாளர் விடுதலை செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் புங்கன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் கலீல் ரகுமான், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொம்பையா, ரெங்கன், ஷேக் அப்துல்காதர், இளைஞரணி ஜிந்தா, ம.தி.மு.க. சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுடலை, காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு இளைஞரணி தலைவர் சித்தார்த், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீரான், கருங்குளம் தெற்கு ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் வடிவு, தி.மு.க. செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. நகர செயலாளர் வையாபுரி முருகன், சி.பி.ஐ. நகர செயலாளர் சிவராமன், கருப்பசாமி மற்றும் கழுகுமலை தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், கழுகுமலை காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கயத்தாறு ஒன்றிய செயலாளர் புவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவி தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் மயில், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மஜித்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாகுல் அமீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் பால்வண்ணவளவன், சி.பி.ஐ. தாலுகா செயலாளர் அம்பிகாபதி, ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் வாழவல்லான் மகராஜன், ஏரல் நகர செயலாளர் பார்த்திபன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி ஏற்பாட்டில் பயணிகள் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் ஏஞ்சலா, வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேது ரத்தினம், நகர அவைத்தலைவர் முனியசாமி, நகர துணைச் செயலாளர் காளியப்பன் செல்வரத்தினம், கலை இலக்கிய அணி அமைப்பாளர் மணி, நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ். நகர செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், ஆதித்தமிழர் பேரவை பிரபாகரன், நம்பிராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், ஆறுமுகநேரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வெள்ளத்துரை, திருச்செந்தூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் தலைவர் ராஜரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குமாரவேல், தி.மு.க. மாவட்ட மாணவர் கலை இலக்கிய துணை அமைப்பாளர் மகேஷ், விடுதலை சிறுத்தை மாநில இலக்கிய துணை அமைப்பாளர் தமிழ்குட்டி, ம.தி.மு.க. நகர அவைத்தலைவர் சுடலையான்டி, தி.மு.க. மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் முத்து ஈஸ்வரி, தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் மகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. பொருளாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் முத்து முகமது, நகர காங்கிரஸ் தலைவர் முத்துவாப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதூல்அஸ்கப், ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் அமானுல்லா, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் செயல் தலைவர் இப்ராஹிம் தாரிக், அமானுல்லா மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஐதுரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

உடன்குடி மெயின் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசிங் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் மீரா, வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் இம்மானுவேல், ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி நகர தி.மு.க. செயலாளர் ஜான்பாஸ்கர் வரவேற்றார்

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெசிபொன்ராணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரவிராஜா (வர்த்தக அணி), சிராஜூதீன் (சிறுபான்மை பிரிவு), முகைதீன் (மாணவர் அணி), விஜயா (தொண்டர் அணி), உடன்குடி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ரஞ்சன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் அன்புராணி, ம.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய அவைத்தலைவர் பர்னபாஸ், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் உடன்குடி நகர செயலாளர் ஆதிநாராயணன், ஒன்றிய குழு தலைவர்கள் பாண்டி, மகாராஜன், கந்தசாமி, இசக்கியம்மாள், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சங்கர், ஆண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உடன்குடி நகர செயலாளர் தவுபிக் அன்சாரி, மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் ஷேக்முகமது, ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story