மாவட்டத்தில் 26 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் 26 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2020 3:30 AM IST (Updated: 29 Sept 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 26 இடங்களில் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 26 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், தி.மு.க. சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பொன் மகேஸ்வரன், தங்கமணி, அன்பழகன், ம.தி.மு.க. நிர்வாகிகள் வீரமணி, வஜ்ரவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மின்னல் சக்தி, மன்னன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோன்று பென்னாகரம் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். இதில் இன்பசேகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மாதையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கருப்பண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பென்னாகரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி ஒன்றியம் பழைய தர்மபுரியில் ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் செந்தில்குமார் எம்.பி. கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் செல்லதுரை, டாக்டர் ராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அரூர் ஒன்றியம் தீர்த்தமலை பஸ் நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகநதி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் வட்டார தலைவர் சுபாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

காரிமங்கலம் நகரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் திருத்த மசோதாவை கண்டித்து மொரப்பூர் சாலையில் பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அன்பழகன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி மனோகரன், காங்கிரஸ் நகர தலைவர் சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஏரியூர் பஸ் நிலையம் அருகில், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் காதர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரமதமிழன், மாவட்ட தமிழ்புலிகள் அமைப்பு செயலாளர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க. நகர செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் நகர தலைவர் சமதர்மம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் சின்னசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் திருவேங்கடம், தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகிகள் இளங்கோ, ரத்தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சக்திவேல், முகிலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இண்டூர் பஸ் நிலையத்தில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அப்புனு, காங்கிரஸ் நிர்வாகி செல்வம், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் வைகுந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகி சந்தான மூர்த்தி மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரூர் கச்சேரி மேட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் முல்லைசெழியன் தலைமை தாங்கினார். மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் ஜானகிராமன், காங்கிரஸ் நிர்வாகி கணேசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பெருமாள், இளங்கோ மற்றும் தி.மு.க., இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பாலக்கோடு தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயலாளர் குட்டி தலைமையில் பாலக்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தில்குமார் எம்.பி., மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், காங்கிரஸ் வட்டார தலைவர் ஜனகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மொரப்பூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் வட்டார தலைவர் பொன்.பிரகாசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், நிர்வாகிகள் சிசுபாலன், தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கோவேந்தன், சாக்கன்சர்மா, கலையரசன், தாமரைகனி, தருமன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாசம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் செந்தில், சரவணன், மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் மசோதா சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், சுதா தருமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி ரங்கநாதன், ராஜா, பத்மாவதி சரவணன், மாசிலாமணி, ஜெயந்தி அழகரசு, முன்னாள் தலைவர் மகாலிங்கம், திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி, கடத்தூர் உள்ளிட்ட 26 இடங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story