மண்டபம் கிழக்கு-மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
மண்டபம் கிழக்கு- மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்று கோஷமிட்டனர்.
பனைக்குளம்,
விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகபூபதி, மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தெளபீக் அலி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாக்கான், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கலைமதி ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் மேகநாதன், பட்டணம்காத்தான் ஊராட்சி செயலாளர் ராஜமோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு அவர்களது கட்சி கொடியை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டதிற்கான ஏற்பாடுகளை மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தம் செய்திருந்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுமடம் நிலோபர்கான், புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன், மண்டபம் ஒன்றிய தி.மு.க. மேற்கு துணைச் செயலாளர் சந்திரன், பட்டணம்காத்தான் பூமிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story