ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு


ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2020 10:09 PM IST (Updated: 29 Sept 2020 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

ஈரோடு,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ளார்.

இதில் மாவட்ட அவைத்தலைவராக ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளராக டி.தங்கராஜ், இணைச்செயலாளராக வண்ணமலர், துணைச்செயலாளர்களாக எம்.சுமதி, சம்பத் என்கிற முத்துகுமரன், பொருளாளராக கருப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர்களாக ஈரோடு எம்.சபரி ராஜ்குமார், மொடக்குறிச்சி எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சார்பு அணி செயலாளர்களாக எம்.லோகநாதன் (புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம்), பெ.நடராஜ் (இதயதெய்வம் அம்மா பேரவை), வெ.அ.முகமது ராஜா, (புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் மன்றம்), கல்பனா (மகளிர் அணி), எஸ்.சங்கர் (மாணவர் அணி), க.ராமசாமி (இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கம்), நா.ராஜா (வக்கீல் பிரிவு), ஜி.அப்துல்ஹக்கீம் (சிறுபான்மையினர் நலப்பிரிவு), ப.லட்சுமணன் (விவசாய பிரிவு) ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஒன்றியம் -பகுதி

மேலும் சார்பு அணி செயலாளர்களாக ஆர்.செந்தில்குமார் (மருத்துவ அணி), அ.ஷேக் அலாவுதீன் (மீனவர் அணி), டி.சரஸ்வதி (இலக்கிய அணி), மு.நவநீதகிருஷ்ணன் (அமைப்புசாரா ஓட்டுனர் அணி), எஸ்.கண்ணன் (இளைஞர் பாசறை), வி.அகிலா (இளம்பெண்கள் பாசறை), பூவேஷ்குமார் (தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு), ஆர்.ஸ்ரீலதா (தகவல் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு), டி.நல்லசாமி (வர்த்தக அணி), ஆர்.செந்தில்குமார் (பொறியாளர் அணி), ஆர்.ரங்கசாமி (நெசவாளர் அணி) ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் ஒன்றிய செயலாளர்களாக பாபு என்கிற ராஜராஜன் (மொடக்குறிச்சி கிழக்கு), பூபாலமுருகன் (மொடக்குறிச்சி மேற்கு), குறுக்குவலசு சின்னச்சாமி (கொடுமுடி), பகுதி செயலாளர்களாக கே.எம்.சக்திவேல் (வீரப்பன்சத்திரம் கிழக்கு), எஸ்.அய்யாசாமி (வீரப்பன்சத்திரம் மேற்கு), ஏ.சீனிவாசன் (கருங்கல்பாளையம் கிழக்கு), பி.கொதுமீரான் உசேன் (கருங்கல்பாளையம் மேற்கு), எஸ்.ஜான் என்கிற நெல்சன் (பெரியார் நகர் கிழக்கு), என்.ராஜா (பெரியார் நகர் மேற்கு), ஐ.ஷாஜஹான் (பி.பி.அக்ரஹாரம் கிழக்கு), எம்.நேரு (பி.பி.அக்ரஹாரம் மேற்கு) ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story