பன்றிக்காய்ச்சல் பரிசோதனை நடத்த குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு, தமிழக அரசு அனுமதி


பன்றிக்காய்ச்சல் பரிசோதனை நடத்த குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு, தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 30 Sept 2020 5:00 AM IST (Updated: 30 Sept 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

பன்றிக்காய்ச்சல் பரிசோதனை நடத்த குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனைக்கு, அரசு சார்பில் மருத்துவ குழு சென்று அங்குள்ள பரிசோதனை கூடத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வைத் தொடர்ந்து மருத்துவ குழு, அந்த மருத்துவமனைக்கு பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தது.

பல்வேறு விரிவான ஆய்வுக்கு பின்னர் அந்த மருத்துவமனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர். முறைப்படி பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் செய்யப்படும் பரிசோதனை குறித்த அறிக்கையை தினந்தோறும் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த பரிசோதனையின் முடிவுகள் சம்பந்தப்பட்ட நோயாளியை தவிர்த்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story