காடுகளையொட்டிய பகுதிகளில் வீடு கட்ட பழங்குடியினருக்கு அனுமதி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நடவடிக்கை
காடுகளையொட்டிய பகுதிகளில் வீடு கட்ட பழங்குடியினருக்கு அனுமதி வழங்கி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மும்பை,
மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வன உரிமைகள் சட்டத்தில் மாற்றங்களை செய்து உள்ளார். இதன்படி அவர் காடுகளையொட்டிய பகுதிகளில் பழங்குடியினர், வனத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வீடு கட்ட அனுமதி வழங்கி உள்ளார்.
இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புலம்பெயர்வது தடுக்கப்படும்
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பால்கர், நந்தர்பூர், கட்சிரோலி மற்றும் மாநிலத்தின் பல இடங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களை பார்வையிட்டார். அப்போது வீடு கட்ட முடியாததால் அவர்கள் வசித்து வரும் இடங்களை விட்டு நகரங்களுக்குள் புலம் பெயர்வது தெரியவந்தது. இதையடுத்து கவர்னர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி வன உரிமைகள் சட்டம் 2006-ல் 5-வது பத்தியில் திருத்தம் செய்து உள்ளார்.
இதன்படி இனிமேல் பழங்குடியின மக்கள் மற்றும் வனப்பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் காடுகளையொட்டிய பகுதிகளில் வீடு கட்டி கொள்ள முடியும். இதன் மூலம் பழங்குடியின மக்கள் அவர்கள் சொந்த ஊரில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story