கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் கவர்னரை சந்தித்து நடிகை பாயல் கோஷ் முறையீடு


கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் கவர்னரை சந்தித்து நடிகை பாயல் கோஷ் முறையீடு
x
தினத்தந்தி 30 Sept 2020 3:34 AM IST (Updated: 30 Sept 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் என்று கவர்னரை சந்தித்து நடிகை பாயஸ் கோஷ் முறையிட்டார்.

மும்பை,

பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இயக்குனர் 7 ஆண்டுகளுக்கு முன் தன்னை கற்பழித்ததாக நடிகை குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை இயக்குனரை கைது செய்யவில்லை. எனவே தனக்கு நீதி கேட்டு பாயல் கோஷ் நேற்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

கைது செய்ய வேண்டும்

இதுகுறித்து நடிகை பாயல் கோசை கவர்னரை சந்திக்க அழைத்து சென்ற மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், “பாதுகாப்பு கேட்டும், அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வலியுறுத்தியும் பாயல் கோஷ் கவர்னரிடம் மனு ஒன்றை கொடுத்தார்” என்றார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் அவர், பாயலுடன் மும்பை இணை போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ் நன்காரேயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Next Story