அண்ணாநகர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் நூதன போராட்டம்


அண்ணாநகர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2020 5:15 AM IST (Updated: 30 Sept 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாநகர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

பூந்தமல்லி,

அண்ணாநகரை சேர்ந்தவர் நர்மதா. இவர் அண்ணா நகர் போலீசாரை கண்டித்து தட்டில் வளையல், பூக்கள் மற்றும் கையில் பாவாடை ஆகியவற்றுடன் அண்ணா நகர் போலீஸ் நிலையம் முன்பு நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில்:-

அண்ணா நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததாலும் அதை கண்டிக்கும் விதமாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணை சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வீட்டின் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story