கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.எஸ்.விஜயகுமார் குணமடைந்தார்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.எஸ்.விஜயகுமார் குணமடைந்து வீடு திரும்பினார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க எம்.எ.ஏ. கே.எஸ்.விஜயகுமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த மாதம் 23-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த மஞ்சங்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாரை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் வீட்டில் உள்ள பூஜை அறையில் அவர் சாமி கும்பிட்டார். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

Related Tags :
Next Story