மிரா பயந்தர்-வசாய் விரார் போலீஸ் கமிஷனரகம் இன்று உதயம் முதல் போலீஸ் கமிஷனராக சதானந்த் ததே நியமனம்
மிரா பயந்தர்-வசாய் விரார் போலீஸ் கமிஷனரகம் இன்று உதயமாகிறது. இதன் முதல் போலீஸ் கமிஷனராக சதானந்த் ததே நியமிக்கப்பட்டு உள்ளார்.
தானே,
தானே, பால்கர் மாவட்டங்களின் கிராமப்புற போலீஸ் நிலையங்களை பிரித்து மிரா பயந்தர்- வசாய் விரார் போலீஸ் இயக்குனரகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்தது. இந்த பகுதிகள் நகர்ப்புறமாக மாறியதாலும், மக்கள் தொகை அதிகரித்ததாலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன்படி மிரா பயந்தர்- வசாய் விரார் போலீஸ் கமிஷனரகம் அக்டோபர் 1-ந் தேதியான இன்று முதல் உதயமாகிறது.
முதல் போலீஸ் கமிஷனர்
இந்த புதிய கமிஷனரகத்தின் முதல் போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சதானந்த் ததே நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் கமிஷனராக ஜெயக்குமார் பணியாற்ற உள்ளார். மிரா பயந்தர்- வசாய் விரார் புதிய போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் மொத்தம் 20 போலீஸ் நிலையங்கள் செயல்படும். இதில் 6 போலீஸ் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டவை.
20 போலீஸ் நிலையங்களில் 8 போலீஸ் நிலையங்கள் தானே மாவட்டத்தில் இருந்தும், மற்றவை பால்கர் மாவட்டத்தில் இருந்தும் பிரிக்கப்பட்டு புதிய போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story