தானேயில் பிரபல ஆடை நிறுவன அலுவலகத்தில் பயங்கர தீ பொருட்கள் எரிந்து நாசம்


தானேயில் பிரபல ஆடை நிறுவன அலுவலகத்தில் பயங்கர தீ பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 Oct 2020 2:40 AM IST (Updated: 1 Oct 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் பிரபல ஆடை நிறுவன அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

தானே,

தானே மேற்கு பொக்ரான் ரோடு நம்பர் -1 பகுதியில் பிரபல ரேமண்ட் ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ அங்கிருந்த பொருட்களில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்புபடையினர் 3 வாகனங்கள், 5 தண்ணீர் டேங்கர்களுடன் அங்கு விரைந்து வந்தனர்.

பொருட்கள் நாசம்

பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அங்கு பற்றி எரி்ந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தீ விபத்தின் போது ஊழியர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

Next Story