பெங்களூரு வன்முறை சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய என்.ஐ.ஏ.வுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூரு வன்முறை சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி என்.ஐ.ஏ.வுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை வெடித்தது. சிறுபான்மை சமுதாயம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அவதூறு கருத்தால் வன்முறை வெடித்து இருந்தது.
இதுதொடர்பாக டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 2 வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் உள்பட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வன்முறை வழக்கில் கைதான சிலருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றும்படி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது அரசு சார்பில் கோர்ட்டில் ஆஜராகி இருந்த வக்கீல் இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு அரசு ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து தற்போது வன்முறை சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வன்முறை சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகளையும் தேசிய புலனாய்வு முகமையினர் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு வன்முறை சம்பவம் தொடர்பாக தற்போதைய விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேசிய புலனாய்வு முகமைக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவிட்டுள்ளார். மேலும் பெங்களூருவில் நிலுவையிலுள்ள மற்ற வழக்குகள் குறித்த விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Tags :
Next Story