நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 222 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 222 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sep 2020 11:18 PM GMT (Updated: 30 Sep 2020 11:18 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் ரெட்டியார்பட்டி, திருக்குறுங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் மற்றும் 2 போலீஸ்காரர்களும் அடங்குவர். இதையடுத்து அவர்கள் பணியாற்றிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 11 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 70 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். 897 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 200 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 416 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 138 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 450 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 12 ஆயிரத்து 741 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 587 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 122 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story