கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 4:59 AM IST (Updated: 1 Oct 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அனைவரையும் சிறையில் அடைக்க வலியுறுத்தி, தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூர்,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அனைவரையும் சிறையில் அடைக்க வலியுறுத்தி, தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சீனா, சேனா சர்தார், இம்ரான் கான், மாவட்ட பொருளாளர் முகம்மது நைனார், எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ராஜா முகம்மது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம், மாநில செயலாளர் அகமது நவவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story