விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 865 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் உதவித்தொகை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 865 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் உதவித்தொகை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Oct 2020 3:30 AM GMT (Updated: 1 Oct 2020 2:22 AM GMT)

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 865 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் உதவித்தொகைக்கான ஆணைகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம் நகரத்தில் 246 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 175 பேருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையும், 22 பேருக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகைக்கான ஆணையும், 4 பேருக்கு ஆதரவற்றோர் உதவித்தொகைக்கான ஆணையும் என 447 பேருக்கு ரூ.53 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கோலியனூர் ஒன்றியத்தில் நடந்த விழாவில் 134 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 102 பேருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையும், 19 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணையும், கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாட்டில் நடந்த விழாவில் 101 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையும், 53 பேருக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணையும், 9 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையும் என 418 பேருக்கு ரூ. 50 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையையும் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழாவில் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திகேயன், அ.தி.மு.க. மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் அற்புதவேல், ஆவின் தலைவர் பேட்டை முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, கண்ணன், எசாலம் பன்னீர், ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் நகர செயலாளர் காசிநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ் குமரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், விழுப்புரம் நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டு சேகர், கண்டமங்கலம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நெற்குணம் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரேசன், முருகன், ஏழுமலை, என்ஜினீயர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story