கடலூர் அருகே 11 ஆயிரம் பேருக்கு ரூ.105 கோடியில் சிறப்பு கடன் உதவி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் வழங்கினர்


கடலூர் அருகே 11 ஆயிரம் பேருக்கு ரூ.105 கோடியில் சிறப்பு கடன் உதவி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் வழங்கினர்
x
தினத்தந்தி 1 Oct 2020 9:21 AM IST (Updated: 1 Oct 2020 9:21 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே 11 ஆயிரம் பேருக்கு ரூ.105 கோடி மதிப்பில் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, எம்.சி.சம்பத் ஆகியோர் சிறப்பு கடன் உதவி வழங்கினர்.

நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் அம்மா நகரும் நியாயவிலை கடைகளை தொடங்கி வைத்தல், கூட்டுறவுத்துறை புதிய கட்டிடங்கள் மற்றும் சிறப்பு கடன் வழங்கும் விழா கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்தியா முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.4 கோடியே 59 லட்சம் மதிப்பில் புதிய கிடங்கு மற்றும் நவீன அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

பின்னர் 56 கூட்டுறவு சங்கங்களில் 72 நகரும் நியாயவிலை கடைகளை தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள், பயிர்க்கடன், கறவை மாடு மற்றும் டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 11 ஆயிரத்து 617 பயனாளிகளுக்கு ரூ.105 கோடியே 86 லட்சம் மதிப்பில் சிறப்பு கடன் உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், முருகுமாறன், நகர செயலாளர் குமரன், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் சேவல்குமார், ஒன்றிய குழு தலைவர் தெய்வபக்கிரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி முருகன், நகர துணை செயலாளர் கந்தன், கூட்டுறவு துறை துணைப்பதிவாளர்கள் சண்முகம், ஜெகத்ரட்சகன், பொது மேலாளர் பலராமன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஜே.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி நன்றி கூறினார்.

Next Story