நச்சலூர் அருகே வேலைக்கு சென்ற ஜோதிடர் வாய்க்காலில் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை
நச்சலூர் அருகே வேலைக்கு சென்ற ஜோதிடர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்,
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நல்லூர் கீழப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது65). இவர் ஜோதிடம் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் நல்லூர் அருகே கணேசபுரம் பகுதியில் உள்ள வாய்க்கால் பக்கம் கந்தசாமி சென்றதாக அப்பகுதி ஊர் மக்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து வாய்க்கால் கரை பகுதியில் சென்று பார்த்தபோது கந்தசாமியின் சட்டை, வேட்டி மற்றும் செருப்புகள் இருந்ததை பார்த்துள்ளனர். இந்நிலையில் கந்தசாமி வாய்க்காலில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை இனுங்கூர் மேல சுக்காம்பட்டி பகுதியிலுள்ள வாய்க்காலில் கந்தசாமியின் உடல் மிதந்தவாறு சென்றதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீசார் கந்தசாமியை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கந்தசாமி மகன் திருநாவுக்கரசு (35) குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வேலைக்கு சென்ற ஜோதிடர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story