பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - வத்திராயிருப்பில் நடந்தது
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அரசு ஊழியர்கள் முன்கூட்டியே கட்டாய ஓய்வு பெறுவது குறித்து மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது வினியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப்பேசினார். முடிவில் பேரூராட்சி ஊழியர் சங்க இணை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story