பல்லடத்தில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் - 3 பேர் கைது
பல்லடத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம்,
பல்லடம் அருள்புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 27 ). இவரது வீட்டிற்கு கோவை சரவணம் பட்டியை சேர்ந்த 27 வயது பெண் நேற்று முன்தினம் வந்து இருந்தார். அப்போது அங்கு இருந்த ராஜூவை அந்த பெண்ணுக்கு அவரது சகோதரர் ராஜேஷ்குமார் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த நிலையில் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. இதற்கிடையே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், இரவு நேரம் ஆகி விட்டதால் பஸ்நிலையத்தில் யாராவது கொண்டு விட்டால் நன்றாக இருக்கும் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை கோவைக்கு பஸ் ஏற்றிவிடுவதாக கூறி ராஜூ தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
கள்ளிமேடு-உகாயனூர் சாலையில் பாறைக்குழி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதாக அந்த பெண்ணிடம் ராஜூ கூறினார். அதன்பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை சரிபார்க்க தொடங்கினார். அப்போது ராஜூவின் நண் பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். பின்னர் ராஜூ உள்பட அவர்கள் 5 பேரும் கும்பலாக சேர்ந்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணின் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவா னார்கள். இதனால் செய்வதறியாது தவித்த அந்த பெண் அங்கிருந்து நடந்தே சிறிது தூரம் வந்தார். பின்னர் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந் தவர்களிடம் ஒரு செல்போனை வாங்கி தனது கணவரிடம் பேசி சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அதன்பின்னர் கணவருடன் கோவைக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றார்.
அதைத்தொடர்ந்து நேற்று கணவன்-மனைவி இருவரும் பல்லடம் வந்து அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து பல்லடம் ஆலூத்தூபாளையம் பிரிவை சேர்ந்த ராஜு (22), பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த அன்புச்செல்வன் (21), பல்லடம் காளிவேலம் பட்டியை சேர்ந்த கவின்குமார் (21), ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப் படுவதாவது:-
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த அந்த பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் தமிழகத்துக்கு வந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பின்னர் சரவணம்பட்டியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். ஏற்கனவே முதல் கணவருடன் திண்டுக்கல்லில் ஒரு மில்லில் வேலை செய்தபோது ராஜேஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் ராஜேஷ்குமாரும் அந்த பெண்ணும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிய ராஜேஷ்குமார் தான் தற்போது திருப்பூரில் வேலை செய்வதாகவும், திருப்பூருக்கு வந்தால் நல்லவேலை, கை நிறைய சம்பளம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் இது குறித்து விசாரிக்க நேற்று முன்தினம் திருப்பூர் வந்தார். பின்னர் ராஜேஷ்குமாரை தொடர்புகொண்டபோது பல்லடம் அருகே உள்ள அருள்புரத்திற்கு வரும்படி அவர் கூறினார். அதன்படி அங்கு வந்ததும், ராஜேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில், அவர் குடியிருக்கும் குங்குமம் பாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்த போது இரவு நேரம் ஆகி விட்டதால் கோவைக்கு செல்ல பஸ் ஏற்றிவிட ராஜேஷ்குமாரின் தம்பி ராஜு தனது மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ராஜு நண்பர் களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story