போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 4:45 PM GMT (Updated: 1 Oct 2020 4:45 PM GMT)

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில், ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில், ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நலச்சங்கத்தின் மண்டல தலைவர் மாது தலைமை தாங்கினார். செயலாளர் ராவணன் முன்னிலை வகித்தார். தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் குழந்தை சாமி கலந்து கொண்டு பேசினார்.

ஓய்வூதியர்களுக்கு 18 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் 9 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பங்கு ஈவுத்தொகை மற்றும் வட்டித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தொ.மு.ச. மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ரங்கநாதன், பணியாளர்கள் சங்க நிர்வாகி கிருஷ்ணசாமி, முபாராக் அலி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story